கனிகளுள் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் 'ராஜ கனிகள்' என்று பெயர். ஒன்று எலுமிச்சை மற்றொன்று நெல்லிக்கனி. இக்கனியின் ஆயுள் நீட்டிக்கும் தன்மை தெரிந்துதான் அதியமான் அவ்வைக்கு கொடுத்ததாக வரலாறுகளில் கூறப்படுகிறது. இப்படி நீண்ட வரலாறு கொண்ட அமிர்தத்திற்கு ஒப்பான அந்த நெல்லிக்கனியின் சிறப்பைப்பற்றி இங்கே பார்ப்போம்.
'ஏழைகளின் ஆப்பிள்' என்று போற்றப்படும் நெல்லிக்கனியானது அரிநெல்லி என்றும் காட்டு நெல்லி அல்லது பெருநெல்லி என்றும் இரு வகைகளில் நமக்குக்கிடைக்கிறது. இதில் காட்டு நெல்லி மட்டும் அதிக மருத்துவகுணமும் பயன்படுவதுமாய் உள்ளது என்பதால் அதைப்பற்றி மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று இருக்கிறேன்.
சிறு சிறு இலைகளுடன் பெரிய மரமாகவும் காய்கள் அனைத்தும் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குவதும் பார்ப்பதற்கே அந்த மரங்கள் ரம்மியமாய் இருக்கும். பொதுவாக கோடை காலங்களில் இம்மரத்தில் காய்கள் அதிகமாய் காய்க்கும். ராஜ கனிகளான எலுமிச்சை மற்றும் நெல்லிக்கனி ஆகியவற்றின் புளிப்புத்தன்மை மட்டுமே (சிட்ரிக் ஆசிட்) உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.
நெல்லிக்கனியின் மருத்துவ குணம் அளவிட முடியாததாகும். இதன் இலை, பட்டை, வேர், பூ, கனி என அனைத்து பகுதிகளுமே மருந்தாக பயன்படுகிறது எனலாம். இம்மரத்தின் நிழலில் நின்று இளைப்பாறி மரத்தின் காற்றை சுவாசித்தாலே நோய்கள் பறந்து போகும். இம்மரத்தின் நிழல் தன்மை கூட உடலுக்கு ஒரு வித குளிர்ச்சியைக்கொடுக்கும்.
அக்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் அவர்கள் குளிக்க பயன்படுத்தும் நீர்நிலைகளில் நெல்லி மரக்கட்டைகளை போட்டு வைத்து அதில் குளிப்பதாகவும், சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக நெல்லிக்கனியினையும் சேர்த்து கொள்வதாகவும், இரவு தூங்கும் போது நெல்லி இலைகள் கொண்டு தயாரித்த படுக்கையில் துயில் கொள்வதாகவும் புராணங்களில் சொல்லப்படுவதுண்டு. இப்படி காலை முதல் இரவு வரையிலும் தங்களது வாழ்க்கையை நெல்லியோடு இணைந்து வாழ்ந்ததால் அவர்கள் நீண்ட ஆயுளோடும் கண்கள் அதிக பிரகாசத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்துள்ளார்கள். நாமும் நெல்லியை பல்வேறு வடிவத்தில் பயன்படுத்துவதன் மூலம், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் எந்த நோய்களும் வரவிடாமல் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும். எளிதில் குறைந்த விலையில் கிடைப்பதாலோ என்னமோ நாம் இக்கனியை முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறோம்.
நெல்லிக்கனியின் சுவையானது சுவைக்கும் போது முதலில் துவர்ப்பாகவும் பின் புளிப்பாகவும் இறுதியில் இனிப்பு சுவையையும் கொடுக்கக்கூடிய அதிசயமான கனி. நெல்லிக்கனியின் சிறப்பு அதில் உள்ள விட்டமின் சி எனப்படும் உயிர்ச்சத்துதான். 100 கிராம் அளவுள்ள மற்ற கனிகளின் விட்டமின் 'சி' சக்தியை இக்கனியுடன் ஒப்பிடும் போது,
அன்னாசி - 0.12 மி.கி.
தக்காளி - 32 மி.கி.
எலுமிச்சை - 63 மி.கி.
வாழைப்பழம் - 170 மி.கி.
கொய்யா - 200 மி.கி.
நெல்லிக்கனி - 600 மி.கி.
மற்ற பழங்களில் உள்ள விட்டமின் 'சி' சத்தானது காற்றாலும், வெப்பத்தாலும் எளிதில் அழியக்கூடியது. ஆனால், நெல்லியில் உள்ள விட்டமின் சக்தியானது எந்த சூழ்நிலையிலும் சிதையாமல் நீண்ட நாட்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது எனலாம்.
நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி, நெல்லி விதைப்பொடி, திரிபலாசூரணம், தேன் நெல்லி இவ்வாறு நெல்லிக்கனியினை பல்வேறு வகைகளில் தயாரித்துக்கொள்ளலாம். இவற்றின் மருத்துவ பயன்களை தொடர்ந்து பார்ப்போம்.
இப்பழத்தினை நேரிடையாக சாப்பிடுவதன் மூலம் அதன் முழுப்பயனையும் அடையலாம். அது மிக சிறந்தது.
பழம் கிடைக்கும் காலத்தில் தினமும் குறைந்த பட்சம் ஒரு பழமாவது சாப்பிட்டு வாருங்கள். அல்லது சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது உங்களை ஆரோக்கியமாக்கி ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கனிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதில் வேண்டிய அளவு நீர் விட்டு, இனிப்பு சேர்த்து பருகி வாருங்கள். இப்படி செய்வதால், சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் எரிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
காய்ச்சின பாலில் இவ் நெல்லிச்சாறினை சிறிது கலந்து, அதனுடன் இனிப்பும் சேர்த்து பருகி வர பாலின் மந்த குணம் மாறி எளிதில் விரைவாக செரிமானம் ஆகும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வருவது என்பது அவர்களது ஜீரண சக்தியை எளிதாக்கும்.
மேலே சொன்னது எல்லாம் நேரிடையாக பழங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள். கனிகள் கிடைக்காத காலங்களில் நாட்டு மருந்து கடைகளில் நெல்லிப்பொடிகள் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
இது போக திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியாகும். இதை வாங்கி தினமும் உறங்க செல்லும் முன் ஒரு அரை டீஸ்பூன் அளவு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வாருங்கள். மேற் சொன்ன பலன்களை கொடுக்க வல்லது இச்சூரணம்.

- வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றையும் சமப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது.
- பித்தம் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய வாந்தி, மயக்கம், காமாலை ஆகியவற்றை தடுத்துவிடுகிறது.
- அதிகப்படியான உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சியை தர வல்லது.
- ரத்தம் சுத்தமாகி, உடல் வலிமை பெறலாம்.
- இன்றைய உணவுப்பழக்க முறையில் மசாலா பொருட்களையும், எண்ணையும் சேர்ப்பது என்பது அத்தியாவசியமாகி விட்டது. இவற்றை உணவுடன் சேர்ப்பதால் இதன் கழிவுகள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்ற உள் உறுப்புகளில் தங்கி தொல்லைகள் பல கொடுப்பதோடு, உறுப்புகளை பலவீனமடையவும் செய்கிறது. இதற்கு நெல்லிக்கனிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உறுப்புகளில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி விடுவதோடு சுத்தமாகவும் வைத்துள்ளது. இந்த மருத்துவத்திற்கு நிகரான மருந்து நெல்லிக்கனியை தவிர வேறு எதுவும் இல்லை எனலாம்.
- இதைப்பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களது கருப்பை கோளாறுகள் அனைத்தும் சீர் செய்யப்படும்.
- என்றும் இளமையோடு இருந்திட 'காயகல்பம்' சாப்பிட்டு வரலாம் என சிலர் கூறுவார்கள். ஆனால், எவரும் எக்காலத்திலும் இளமையோடு இருந்து விடமுடியாது. ஆனால் முதுமையை தள்ளிப்போடலாம் என்பதே சரி. உடல் முதுமை அடையக்காரணம் உடலின் செல்கள் முதுமை அடைவதே. அப்படி செல்கள் முதுமை அடைவதை தள்ளிப்போட நெல்லிக்கனிகள் பெரும் பங்காற்றுகிறது.
- விட்டமின் 'சி' சத்து குறைவால் ஏற்படும் ஸ்கார்வி எனும் நோயால் எலும்புகள் வலு இழந்து போகும். பற்கள் சொத்தையாகும். ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். நகங்கள் வெண்மை நிறமடையும். இதற்கு மிக சிறந்த நிவாரணி நெல்லிக்கனி ஆகும்.
- உடலில் ஏற்படும் நோய்களுக்கு ஆதி காரணமான மலசிக்கலுக்கு மருந்து, மாத்திரைகள் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் போதும்.
- தவறாமல் தினம் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் கண் பார்வை என்பது மிகத்தெளிவாக இருக்கும். தலை முடி உதிர்தல், சளி, தும்மல், பீனிசம் போன்ற நோய்கள் அண்டாது.
- மது அருந்துவோர்களின் உடல், உள் உறுப்புகள், நரம்பு மண்டலம் என அனைத்தும் வெகுவாக பாதிப்படைந்திருக்கும். இவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனியினை ஏதாவது ஒரு முறையில் எடுத்து வர உடல் தேறி வரும். ஆனால் கண்டிப்பாக அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
- உடலில் ஏற்பட்டுள்ள நாட்பட்ட புண்களை, பள்ளம் விழுந்த புண்களை ஆற்றிட, நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி அரைத்து பற்று போட்டு வர, புண்கள் ஆறி விரைவில் குணமாவதோடு பள்ளமும் சரி ஆகிவிடும்.
- அஜீரணம், இதய பலவீனம், அதிக ரத்த அழுத்தம், பசி இன்மை, நாக்கில் ருசி இன்மை, தோல் நோய்கள் இப்படி இதன் மருத்துவ பயன்கள் நீண்டு கொண்டே போகிறது.
பழம் கிடைக்கும் காலத்தில் தினமும் குறைந்த பட்சம் ஒரு பழமாவது சாப்பிட்டு வாருங்கள். அல்லது சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது உங்களை ஆரோக்கியமாக்கி ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கனிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அதில் வேண்டிய அளவு நீர் விட்டு, இனிப்பு சேர்த்து பருகி வாருங்கள். இப்படி செய்வதால், சிறுநீர் எரிச்சல், ஆசனவாய் எரிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
காய்ச்சின பாலில் இவ் நெல்லிச்சாறினை சிறிது கலந்து, அதனுடன் இனிப்பும் சேர்த்து பருகி வர பாலின் மந்த குணம் மாறி எளிதில் விரைவாக செரிமானம் ஆகும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வருவது என்பது அவர்களது ஜீரண சக்தியை எளிதாக்கும்.
மேலே சொன்னது எல்லாம் நேரிடையாக பழங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள். கனிகள் கிடைக்காத காலங்களில் நாட்டு மருந்து கடைகளில் நெல்லிப்பொடிகள் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
- தினமும் இரவு உறங்க செல்லும் முன் அரை டீஸ்பூன் அளவு பொடியினை பாலுடனோ அல்லது தேன் கலந்தோ, இரண்டும் கிடைக்காத பட்சத்தில் இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடனோ பருகி வர, பழங்கள் நேரிடையாக சாப்பிடுவதின் பலன்களை பெற்றிடலாம்.
- நெல்லிப்பொடியுடன் சாம்பல் சம அளவில் கலந்து பல் தேய்த்து வர, பல் கூச்சம், பல் வலி, பல் சொத்தை, பல் ஆட்டம், ஈறு கெட்டு போதல் போன்ற பல் சம்பந்தப்பட்ட நோய் எதுவும் அண்டாது. வாழ்நாளில் பல் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் என்பதே இல்லை.
- நெல்லிப்பொடியுடன் பச்சைப்பயிறு மாவு சம அளவு கலந்து, தலை மற்றும் உடலில் குளியல் பொடி போல தேய்த்து வர, தலை முடி உதிர்வு, தலை முடி வறட்சி நீங்கும். தோல் வறட்சி குறைத்து தோலினை மினு மினுப்பாக வைக்கும்.
- வீடுகளில், அலுவலகங்களில் நாம் அருந்தும் தண்ணீரில், ஒரு லிட்டர் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் நெல்லிப்பொடி என கலந்து குடித்து வர, உள் உறுப்புகள் சுத்தமடைந்து அதன் செயல்பாடுகள் நன்றாக அமையும். மலச்சிக்கல்கள் தீரும்.
இது போக திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியாகும். இதை வாங்கி தினமும் உறங்க செல்லும் முன் ஒரு அரை டீஸ்பூன் அளவு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்து வாருங்கள். மேற் சொன்ன பலன்களை கொடுக்க வல்லது இச்சூரணம்.
மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கும், நீடித்த ஆயுளுக்கும்
இறைவனால் படைக்கப்பட்ட, எங்கும் எளிதாக மலிவாக
இயற்கையாக படைத்திட்ட அற்புத கனி இவ் நெல்லிக்கனி.
பயன்படுத்துவோம். பலனடைவோம்.

0 Comment to "நலம் தரும் காய் கனிகள் - வரிசையில் இன்று நெல்லிக்கனி "
Post a Comment